• Sep 17 2026

அஜித் இப்படியெல்லாம் செய்வாரா? சூரி உடைத்த Exclusive ரகசியம்.. வைரலான பேட்டி.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் எளிமையாகவும் அன்பாகவும் பழகுபவர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் அஜித். அவருடன் பணியாற்றிய பலரும், அவரது மனிதநேய குணங்கள் குறித்து அவ்வப்போது பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில், நடிகர் சூரி அஜித் குறித்து பேசியுள்ள பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த பேட்டியில் சூரி பேசுகையில், “அஜித் சார் அனைவரையும் மிகுந்த மரியாதையுடன் கவனித்துக்கொள்வார். படப்பிடிப்புத் தளத்திற்கு புதிதாக யாராவது வந்தால், அவரே நேரில் சென்று வரவேற்று நலம் விசாரிப்பார்..” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், படப்பிடிப்பு நேரத்தில் கூட அனைவரிடமும் மிகவும் இயல்பாக பழகும் அஜித், “ஃப்ரீயா இருந்தா காபி சாப்பிடலாமே, வர்றீங்களா?” என அன்புடன் அழைப்பார் என்றும் சூரி கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, மதிய உணவு நேரத்திலும் படக்குழுவினர் வெளியே சென்று சாப்பிடாமல், அனைவரும் தனது கேரவனிலேயே ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று அஜித் விரும்புவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் இந்த எளிமையும், அனைவரையும் சமமாக மதிக்கும் குணமும் தான் அவரை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் தொடர்ந்து கொண்டாட வைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சூரியின் இந்த வார்த்தைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement