• Apr 24 2026

யோகி பாபு நடிக்கும் ‘கெணத்த காணோம்’ – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடின உழைப்பின் மூலம் உயர்ந்த நடிகர்களில் முக்கியமானவராக யோகி பாபு திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், பின்னர் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். தற்போது நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில், யோகி பாபு நடிக்கவுள்ள புதிய படம் ‘கெணத்த காணோம்’. இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடிக்கிறார். உணர்வுப்பூர்வமான கதைகளுக்காக அறியப்படும் சுரேஷ் சங்கையா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள  ‘கெணத்த காணோம்’ படத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

குறித்த போஸ்டரில், வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு மழையும் தண்ணீரும் கிடைக்க வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்யும்  தோற்றத்தில் யோகி பாபு காணப்படுகிறார்.  

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கிய இந்த படம், வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற சமூக பிரச்சினைகளை நகைச்சுவையுடன் பேசுகிறது. 


முன்னதாக வெளியான டீசரில், மழை வர பல முயற்சிகளை மேற்கொள்ளும் கிராம மக்கள், இறுதியாக யோகி பாபு வீட்டில் கிணறு தோண்டும் போது தண்ணீருக்கு பதிலாக டைனோசர் எச்சங்களை கண்டுபிடிப்பது போன்ற வித்தியாசமான காட்சி  காட்டப்பட்டது. இதனால் தொல்லியல் துறை தலையிட்டு, கிராம மக்களின் பிரச்சினை மேலும் பெரிதாகிறது.

இந்த படம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வறண்ட கிராமத்தை பின்னணியாக கொண்டு, அங்குள்ள மக்களின் போராட்டங்களையும் சந்தோஷங்களையும் நெருக்கமாக பதிவு செய்கிறது என இயக்குநர் சுரேஷ் சங்கையா முன்பே தெரிவித்திருந்தார்.

இந்த படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஆர்.ஆர். டாக்கீஸ் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement