நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பிரதர். இதனை அடுத்து ஜீனி , தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்தியா மெனன் நடிக்கிறார். அத்தோடு யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடத்தில் கவர்ந்தது. போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்துள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.
ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் என்னை இழுக்குதடி பாடல் வெளியாகி ரசிகர்களை கட்டி இழுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அது வரையில் அமரன், பிரதர் போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களை வைப் பண்ணிக்கொண்டிருந்த ரசிகர்கள்.
d_i_a
இந்த பாடல் வெளியானதில் இருந்து இதனை ட்ரெண்டாக்கி கொண்டு இருக்கிறார்கள். ஆர்.ரகுமான் மற்றும் தீ பாடிய இந்த பாடலுக்கு நடிகர் யோகிபாபு நடனமாடி இப்போது வைரலாகி வருகிற வீடியோ இதோ...
Look who joined the #YennaiIzhukkuthadi craze - our favourite @iYogiBabu 💖🤩
We can't stop vibing to this song on loop🫶 ▶️ https://t.co/qwHIHRH8U9
“காதலிக்க நேரமில்லை”#KadhalikkaNeramillai @actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @arrahman @tseriessouth… pic.twitter.com/FYtVxQF2Og
Listen News!