• Dec 26 2024

அஜித்தின் படங்கள் பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகாது.? சினிமா சூதாட்டத்தை உடைத்த பிரபலம்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர்தான் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து வருகின்றார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகிய முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். அதே நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் குமார் பிஸியாக நடித்து வருகின்றார்.

இதற்கு இடையில் கார் ரேஸ், பைக்கில் நண்பர்களுடன் ட்ரிப் செல்வது, குடும்பத்துடன் டைம் ஸ்பென்ட் பண்ணுவது என்று அஜித் தனது ஸ்டைலில் வாழ்க்கையை ரசித்து வருகின்றார். அஜித்தின் படங்கள் மட்டும் இன்றி அவரது நிஜ வாழ்க்கையில் வெளியாகும் சம்பவங்களை ரசிக்கும் ரசிகர்களும் ஏராளம் உண்டு.

d_i_a

இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகரான பிஸ்மி அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களுமே பொங்கலுக்கு ரிலீசாகாது என்று மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், அஜித் நடிக்கும் இரண்டு படங்களுமே பொங்கலுக்கு ரிலிஸ் ஆகாது. இப்போதைய சினிமா நிலவரம் இது தான். இங்கே இருக்கிற அந்த ட்ரெயினிங் விஷயங்கள்  தெரியாதவர்கள் கிளப்பி விட்ட ஒரு வதந்திதான் பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என்பது.

இப்போதுள்ள சினிமா வந்து வியாபாரம் என்பதை தாண்டி சூதாட்டமாக மாறிடுச்சு. எந்த போட்டியும் இல்லாமல் நம்ம படத்தை களத்தில் இறக்கி ஒரு நாள் ரெண்டு நாள்லயே நம்ம போட்ட காச விட பல மடங்கு லாபத்தை அள்ளி விடனும் என்ற நோக்கில் தான் தற்போதைய சினிமாத்துறை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் அப்படி என்றால் அஜித்தின் இரண்டு படங்களில் ஒரு படம் கூட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாதா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். எனினும் இது தொடர்பான உண்மை நிலவரத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement