• Dec 26 2024

நீ ஒரு விஷம்.! பாக்கியாவுக்கு ஆவேசமாக சவால் விட்ட கோபி! எழிலை நோட்டமிட்ட கணேஷ்! மீண்டும் ராதிகாவுடன் மோதிய ஈஸ்வரி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

அதில், கோபியிடம் பாக்கியாக்கு வாய பாருடா.. புள்ள பூச்சியா இருந்திட்டு எப்படி கதைக்கிற என்று, அதோட ராதிகாவையும் அடக்கி வை என சொல்லிக் கொள்கிறார்.

இதை தொடர்ந்து, சமையலறையில் இருந்த பாக்கியாவிடம் சவால் விடுகிறார் கோபி. அதன்படி, நான் உன்ன இடியட்டா தான் பாத்தன். ஆனா நீ ஒரு விஷம். இப்ப சொல்லுறன் கேளு, இனி இந்த வீட்ட  விட்டு போக மாட்டன். உன்ன வெளிய அனுப்புவன். உன் கூட இருந்தவங்க எல்லாம் உன்ன விட்டு போவாங்க என பேசுகிறார்.

இதற்கு பாக்கியா, உங்களுக்கு நிஜமாவே ஏதும் புரியலையா? நான் நியாயமா தான் இருக்கன். அதால தான் என்ன விட்டு யாரும் போகாம இருக்காங்க. ஒருவேளை அப்படி நடந்தா அப்ப வந்து இப்படி பேசுங்க என திட்டி அனுப்புகிறார்.

மறுபக்கம், வார்கிங் போகும் எழிலை பின் தொடர்கிறார் கணேஷ். ஆனால் எழில் திரும்பிப் பார்க்கும் போது ஒளிந்து கொள்கிறார்.

இன்னொரு பக்கம், செழியன் ஆபிஸ் கிளம்புகிறார். இதன்போது பாக்கியாவிடம் சொல்ல அவர் சாப்பாடு குடுத்து அனுப்புகிறார். மேலும் ரோட்ல தண்ணி நிக்குது பாத்து போங்க என பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார். இவற்றை கோபி பார்த்துக் கொண்டு நிற்கிறார். எனினும் யாரும் அவரிடம் ஏதும் சொல்லாமல் போவதை பார்த்து ஈஸ்வரி, நீ இங்க தானே இருக்க, உன் கிட்ட யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்களா என சொல்ல, தேங்க்ஸ் அம்மா என சொல்லிவிட்டு பாக்கியாவை முறைத்துக் கொண்டு செல்கிறார்.

இன்னொரு பக்கம், கோபி ஆபிஸ் போகாம இருக்க, ராதிகா ஏன் போகல.. இன்னும் கோவம் போகலையா? உங்கள சமாதானம் செய்ய முடியாது என சொல்லிக் கொண்டு இருக்க, இடையில் வந்த ஈஸ்வரி, என்ன காலலையே சண்ட போட வெளிக்கிட்டியா? என  சொல்ல, மதியம் என்னால சமைக்க முடியாது..நீங்க வெளிய சாப்பிடுங்க என சொல்ல, ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார். என பிள்ளைக்கு நானே சமைத்துக் கொடுக்கிறேன்  என சொல்லுகிறார். மேலும், இதுக்கு தான் இந்த ராஜகுமாரிய கடல் தாண்டி கூட்டி வந்தியா என கேட்கிறார். 

இதை தொடர்ந்து,  வெளிய வந்த கோபியிடம் பேங்க்ல இருந்து வந்தவங்க, இன்னும் 3 நாள் தான் டைம் உங்களுக்கு.. பணம் கொடுக்கல என்றா வீட்ட வந்து பிரச்சனை பண்ணுவன் என மிரட்டி போகிறார். அதன்பின், அவருடைய நண்பரை சந்தித்து நடந்தவற்றை சொல்லுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.




Advertisement

Advertisement