• Dec 25 2024

காதலியை பிரிந்த பப்லு வெளியிட்ட முதல் வீடியோ! அவ்வளவுதானா? 90ஸ் கிட்ஸ் கொண்டாட்டம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் பப்லு ப்ரித்விராஜ் பல காலமாக சினிமாவில் நடித்து வருகிறார். படங்களில் பல முக்கிய ரோல்களில், நெகட்டிவ் பாத்திரங்களில் நடித்து வந்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடா, மொழிகளில் பல்வேறு படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். எனினும் இதையடுத்து தமிழ் சீரியல்களிலும் இவர் அறிமுகம் ஆனார். 1990ல் இருந்து இவர் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். இடையில் கொஞ்சம் சீரியல்களில் இருந்து பிரேக் எடுத்தவர் தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அத்தோடு பப்லு ப்ரித்விராஜ் நான் வாழ வைப்பேன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1979ல் இவர் அந்த படத்தில் பப்லு என்ற பெயரில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இவரின் பெயர் பப்லு ப்ரித்விராஜ் என்று மாறியது.

அதன்பின்னர்  சிறிய பிரேக் எடுத்தவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த முறை மலையாள படங்களில் இவர் சிறிய சிறிய ரோல்களில் நடித்து வந்தார். அதையடுத்து பாலசந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் இவருக்கு வாய்ப்புவழங்கப்பட்டது . அந்த படத்தில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதன் விளைவாக அவள் வருவாளா படத்தில் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அதை தொடர்ந்து வரிசையாக சீரியல்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2000களில், ரமணி வெர்சஸ் ரமணி சீரியல்களிலும், நாகா இயக்கிய மர்ம தேசம் என்ற சூப்பர்நேச்சுரல் த்ரில்லரிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.


முக்கியமாக மர்ம தேசத்தில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. ஜெயா டிவியில் சவால் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அவர் ராதிகாவின் அரசி சீரியலில் திருநங்கை ரவுடியாக நடித்தார். அத்தோடு அதில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. 1994ல் இவர் பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த திருமணத்தை தொடர்ந்து இவர்களுக்கு ஆட்டிசம் உள்ள குழந்தை ஒன்று பிறந்தது. 

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் சில வருடங்களுக்கு முன் பிரிந்தார்கள். நீண்ட காலமாக தனியாக வசித்து வந்த பிரித்விராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் 23 வயதே ஆன ஷீத்தல் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என பெரிய அளவில் சர்ச்சைகள் கிளப்பியது. 

பப்லு வழங்கிய பேட்டி ஒன்றில், எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கோம் என ஓபனாக சொல்லி இருந்தார். இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட 30 வயதுக்கு மேலான வித்தியாசம் காணப்படுகின்றது.


எனினும், ஏனையவரின் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், ஷீத்தலை கப் கேக் எனக் கொஞ்சுவதும், வானத்தில் ப்ரோபோஸ் செய்த வீடியோவையும் யூட்யூப்பில் வெளியிட்டு கடுப்பேத்தி வந்தார்.

இந்த நிலையில், ஷீத்தல் மற்றும் பிரித்விராஜ் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தாங்கள் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கின்றனர். மேலும், நேற்றைய தினம் பிறந்த நாளை தனியாக கொண்டாடியுள்ளார் பப்லு. இதனால் இவர்களுக்குள் விரிசல் வந்துவிட்டது  என்பது நிரூபணமாகிறது.

அதே நேரத்தில் ஷீத்தல் போட்ட இறுதி பதிவு ஒன்றிற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் பிரிந்து விட்டீங்களா? என்று கேள்வி கேட்டிருந்ததுக்கு அவர் லைக் கொடுத்திருந்தார். 

இதை தொடர்ந்து தான் பப்லு ஷீத்தல் இல்லாமல் கொண்டாடிய பிறந்தநாள் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதன் காரணமாகவே, இவை அனைத்தும் வதந்தி இல்லை உண்மைதான் என்பது தெளிவாகிவிட்டது என்று பலரும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் நேற்று பப்லுவின் பிறந்தநாளில் ஷீத்தல் அங்கு இல்லை. இதனால் இவர்கள் இருவரும் உண்மையில்தான் பிரிந்து விட்டார்கள் என்று 90ஸ் கிட்ஸ்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

எனினும், அவர்களுக்கு ரசிகர்கள் மீண்டும் அவர்கள் சேர்வார்களா? இல்லையா? என குழப்பத்தில் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement