• Dec 25 2024

நீ போய் பொண்டாட்டி முந்தானைய புடிச்சுக்கோ.. ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்! அடிதடியில் கதிர்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

இதுவரையில், தர்சினியை கடத்தி வைத்து ரசிகர்களுக்கு சலிப்படையும் வரையில் இந்த சீரியல் நகர்ந்து வந்த நிலையில், தற்போது தர்ஷினி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் குணசேகரன் மாட்டுவாரா இல்லையா? இல்லை மீண்டும் தர்ஷினி பயத்தில் உண்மைகளை மறைக்கப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


அதன்படி தற்போது வெளியான ப்ரோமோவில், ஹாஸ்பிடலில் இருக்கும் தர்ஷினி மயக்கத்தில் அப்பா என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என பயந்து கொண்டே நடுக்கமான குரலில் பேசுகிறார்.

அதற்கு குணசேகரன், அப்பா வந்துட்டன்டா.. இனிமே உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என நடிக்கிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி, ஜனனியும் சக்தியிடம் ஒருவேளை அவர் ஏதோ பண்ணிட்டு வந்து போலீஸ் இப்படி சொல்றாங்களா என்ன பேசிக் கொள்கிறார்கள்.

இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கும் தர்சினியை பார்ப்பதற்காக கதிர், ஞானம் வர அவர்கள் பார்க்கக் கூடாது என கரிகாலன் தடுக்கிறார்.

அதன் பின் ஞானத்திடம், வீட்டுக்குப் போய் உன் பொண்டாட்டிட முந்தானைய  பிடிச்சுக்கோ.. என கரிகாலன் சொல்ல, ஹாஸ்பிடல் என்றும்  பார்க்காமல் கதிர் கரிகாலுடன் அடிதடியில் இறங்குகிறார். அதன் பின் அங்கு வந்த போலீஸ் கதிரை அடக்கி அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்கள்.


Advertisement

Advertisement