• Dec 26 2024

Market அதிகமா இருக்குன்னு சொல்றாங்க...! ஹாலிவுட்டை பிரமிக்க வைத்த சூரியின் சம்பள விபரம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தலை காட்டியவர் தான் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராக கொண்ட இவர், பல்வேறு கிராமத்து  திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு 2009 இல் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொண்டதன் மூலம், மிகவும் பிரபலம் ஆனார். அன்று முதல் அவர் பரோட்டா சூரி என்றே அறியப்பட்டார்.

1997 முதல் தற்போது வரையில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


ஆரம்பத்தில் காமெடி நடிகராக களமிறங்கிய சூரி, தற்போது ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக  உயர்ந்திருக்கிறார். அதற்கு அவர் மிகவும் உழைத்தது தான் இதற்கான காரணம்.

தன் உடலை கட்டுமஸ்தானா தோற்றத்தில் வைக்க எப்போதும் உடற்பயிற்சி செய்யும் சூரியன் டிரான்ஸ்பர்மேஷன் பல டாப் நடிகர்களையே பிரமிக்க செய்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சூரி, அதன் பின் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் என பேசப்படுகிறது.


மற்ற எந்த காமெடி நடிகருக்கும் இந்த அளவிற்கு சம்பளம் உயர்ந்ததில்லை என ஹாலிவுட்டில் பேசப்படுகிறது.

அடுத்ததாக ராம் இயக்கத்தில் “ஏழு கடல் ஏழுமலை” படத்திலும், துறை செந்தில் குமார இயக்கத்தில் கருடன் உள்ளிட்ட திரைப்படங்கள் நடத்து வருகிறார் சூரி.

இதில் கருடன் படத்தில் நடிக்க சூரி 8 கோடி ரூபா சம்பளம் வாங்கியுள்ளாராம்.  ஆரம்பத்தில் ஐந்துக்கும் பத்திற்கும் கஷ்டப்பட்டு கூட்டத்தில் ஒருவனாக நடித்து வந்த சூரி, இன்று இந்த அளவிற்கு தன் சொந்த முயற்சியில் வளர்ந்திருப்பதை ஹாலிவுட் திரையுலகமே பிரமித்து பேசுகின்றது.

Advertisement

Advertisement