• Oct 26 2024

'நீ என் பொண்ணு மாதிரி இருக்க..' அர்ச்சனாவை பார்த்து நெகிழ்ந்த கூல் சுரேஷ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


தற்போது பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றது. அதன்படி ஆட்டம், பாட்டம், சாப்பாடு என உற்சாகமாக தமது பொழுதுகளை கடந்து வருகிறார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள கூல் சுரேஷ் அர்ச்சனாவை பார்த்து 'நீ என் பொண்ணு மாதிரி இருக்க' என கூறியுள்ளார்.


அதன்படி, விசித்தராவும் கூல் சுரேசும் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த இடத்திற்கு அர்ச்சனா வருகிறார். இத பார்த்த கூல் சுரேஷ், 'ஜாலியா இருந்தியா அர்ச்சனா' என கேக்க, 'ஆமா இன்டைக்கு முழுக்க செம ஜாலியா இருந்தன்.பாத்தீங்களே நல்லா குதிச்சிட்டு இருந்தன்.இப்படி இருக்க தான் எனக்கு பிடிக்கும்' என அர்ச்சனா சொல்ல, 'நீ என் பொண்ணு மாதிரி இருக்க' என அர்ச்சனாவுக்கு சொல்கிறார் கூல் சுரேஷ். 

Advertisement