• Dec 25 2024

இனிமேல் நடிக்க மாட்டேன்...! இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி எடுத்த அதிரடி முடிவு...!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

 'கொலை' படத்தில் விஜய் ஆண்டனியுடனும், சிங்கப்பூர் சலூன்' படத்தில் ஆர்ஜே பாலாஜியுடனும் நடித்த மீனாட்சி சவுத்ரி அடுத்தகட்ட பாய்ச்சலாக 'கோட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மாள் ஜோடியாக நடித்தார்.


இந்த நிலையில் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் வெற்றி பெற்றாலும், படத்தில் அவர் துல்கர் சல்மான் மனைவியாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடித்தது அவருக்கு திருப்தியாக அமையவில்லை.


'இளம் வயதிலேயே இப்படி முதிர்ச்சியான கேரக்டரில் நடிப்பது விரைவிலேயே உன்னை குணசித்ர நடிகையாக மாற்றி விடும்' என்று நண்பர்களும் நலம் விரும்பிகளும் வற்புறுத்தியதை தொடர்ந்து இனி மனைவியாக, அம்மாவாக நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார். 


d_i_a

மேலும் ரசிகர்களுக்குப் பிடித்த இளமையான கேரக்டர்களில் நடிக்க போகிறேன். இனிமேல் ஹீரோவுக்கு மனைவியாக நடிக்க வேண்டும் என்று யாராவது கேட்டால், அதில் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த விடையம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. 

Advertisement

Advertisement