• Sep 17 2026

Purple உடையில் இப்படியொரு லுக்கா.? ஸ்ருதிஹாசனின் போட்டோஸைப் பார்த்து வாயை பிளந்த இளசுகள்

shali / 1 week ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவருமான ஸ்ருதிஹாசன், தனது தனித்துவமான நடிப்பு மற்றும் பன்முகத் திறமைகளால் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 

நடிகை மட்டுமின்றி பாடகி, இசையமைப்பாளர் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் ஸ்ருதிஹாசனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் ஸ்ருதிஹாசன் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை தொடர்பான பதிவுகளை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


இந்நிலையில், ஸ்ருதிஹாசன் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தப் புகைப்படங்களில், purple நிறத்திலான ஸ்டைலிஷான ஆடையில் தோன்றியுள்ள அவர், மிகவும் அழகாகவும் வித்தியாசமான லுக்கிலும் போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்ருதிஹாசனின் இந்த புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருவதுடன், புகைப்படங்களுக்கு லைக்குகளையும் குவித்து வருகின்றனர். இதனால் அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Advertisement

Advertisement