இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன் ரசிகர்களை சந்தித்த போது புகைப்படம் எடுத்தவர்கள் மீது திடீரென கோபமடைந்த சம்பவம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.
இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை நேரில் சந்திப்பதை வழக்கமான செயற்பாடாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் மாலை தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை அமிதாப் பச்சன் காண சென்றார்.
இதன்போது வெளியில் இருந்து வந்த சிலர் ரசிகர்களுக்கு இடையூறு செய்துள்ளனர்.
அதேநேரம் அமிதாப் பச்சன் ரசிகர்களை பார்த்து கையசைக்க முயன்ற போது வெளியில் இருந்து வந்த சிலர் புகைப்படம் எடுக்க முந்திக் கொண்டு வந்ததால் அமிதாப் பச்சன் 'ஏய் புகைப்படம் எடுக்காதே நிறுத்து' என கோபத்தில் கத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!