பாலிவுட் ரசிகர்களுக்கு புதிய பரிசாக உருவாகி வரும் படம் தான் ‘Thama’. ஆயுஷ்மான் குரானா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து பணியாற்றும் இந்த திரைப்படம், சமீப காலமாகவே பேச்சு வார்த்தையில் உள்ள சூழ்நிலையில், படக்குழு தற்போது ராஷ்மிகாவின் கதாபாத்திரத்தை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
மேலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 'Thama’ திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
‘Thama’ படக்குழு சமூக வலைத்தள பக்கங்களில் ராஷ்மிகாவின் கதாபாத்திரத்தை வெளியிட்டு, ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!