மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் பெயர் வாங்கிய ஃபகத் ஃபாசில், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தன்னிச்சையான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
இப்போது, இவரைப் பற்றிய ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஃபகத் ஃபாசில் ஹாலிவுட் வாய்ப்பைத் தற்காலிகமாக நிராகரித்துள்ளார் என்பது தான்! அதுவும் சாதாரண படம் அல்ல – ஆஸ்கர் விருது வென்ற படங்களை இயக்கிய இயக்குநரின் படத்தையே அவர் உதறித் தள்ளியுள்ளார்.
ஃபகத் ஃபாசில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு கொடுத்த ஒரு நேர்காணலில் இந்த தகவலைக் கூறியுள்ளார். "நான் ஒருமுறை ஹாலிவுட் வாய்ப்பு ஒன்றை தவிர்த்து விட்டேன். THE REVENANT, BIRDMAN போன்ற ஆஸ்கர் வென்ற படங்களை இயக்கிய இனரிட்டோ அவர்கள், ஒரு படத்திற்காக என்னை அணுகினார்," என்று ஃபகத் கூறியுள்ளார்.
அந்த வாய்ப்பை பற்றி மேலும் விளக்கமாகச் சொன்ன அவர், "அவர்கள் என்னிடம், ‘நீங்கள் அமெரிக்காவில் நான்கு மாதங்கள் தங்கி, அங்குள்ள மக்களின் பேச்சு நடை, கலாச்சாரம் போன்றவற்றை பழக வேண்டும்’ என்று கேட்டனர். மேலும், அந்தப் படத்திற்கு சம்பளமும் இருக்காது.. அவ்வளவு மெனக்கெடனுமா என்று தோணுச்சு.. அதனால் தான் அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.." என்றார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!