• Jul 31 2025

இனி மக்களோடு மக்களாக தான் இருக்கப்போகிறோம்..! – த.வெ.க தலைவர் விஜய் பகிர்வு!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் வரலாற்றில் சமூக நலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் த.வெ.க கட்சி அதன் உறுப்பினர் சேர்க்கை செயலியை மதுரையில் சிறப்பாக வெளியிட்டு, மக்களுடன் நேரடியாக இணையக்கூடிய புதிய யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த விழாவில் தலைமை வகித்த த.வெ.க தலைவர் விஜய், “இனி மக்களோடு மக்களாக தான் இருக்கப் போகிறோம்” என உறுதியளித்து, கட்சியின் எதிர்கால கொள்கைகள் குறித்து தெளிவாக கதைத்தார்.

மேடையில் மட்டுமே அமர்ந்து பேசும் அரசியல் அல்ல, மக்களிடம் நேரடியாக சென்று, அவர்களது குரலை கேட்டுத் தீர்வுகளைக் கொண்டுவரும் அரசியல் என்பது தான் இந்த இயக்கத்தின் நோக்கம். விழாவில் பேசிய விஜய், இதையே வலியுறுத்தினார்.


த.வெ.க இயக்கம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள், தமிழக அரசியலில் மக்கள் மையப்படுத்தப்பட்ட புதிய மாற்றத்துக்கான அடித்தளங்களை அமைக்கின்றன. இது வெறும் பேச்சாக இல்லாது, செயல்பாடுகளால் நிரூபிக்கப்படும் மாற்றம் எனச் சிலர் கருதுகின்றனர். 

Advertisement

Advertisement