• Sep 14 2025

எல்லாருக்கும் உதவி செய்யுறாரே.. பணம் எங்கிருந்து வந்தது.? பாலாவை குறிவைக்கும் கூல் சுரேஷ்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

காமெடி உலகில் மக்கள் மனதை வென்று, சமீபத்தில் சமூக சேவைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் காமெடி ஸ்டார் KPY பாலா. பலர் அவரைப் பாராட்டுவதுடன் , அதே நேரத்தில் சிலர் கேள்விகளும் எழுப்பி வருகின்றனர். சமீபமாக, நடிகரும், சமூக ஊடகங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் தன்மையுடையவருமான கூல் சுரேஷ், KPY பாலாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.


KPY பாலா, விஜய் டிவியின் கலகலப்பான நிகழ்ச்சியான "கலக்கப்போவது யாரு" மூலம் பெரிதும் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து, அவர் சமூக சேவையில் ஈடுபட தொடங்கினார். அவர் ஆரம்பித்துள்ள இலவச மருத்துவ மையம், ஏழைகளுக்கு உதவி செய்தல் என பல்வேறு வேலைகளால் மக்கள் மத்தியில் நல்லபெயரை பெற்றுவருகிறார்.

பலரும் அவரை "இளைஞர்களுக்கான முன்மாதிரி" என பாராட்டியுள்ள நிலையில், தற்போது ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளார் நடிகர் கூல் சுரேஷ்.


கூல் சுரேஷ் அதன்போது, "பாக்கிறவங்களுக்கு எல்லாம் KPY பாலா உதவி செய்யுறார். இலவச ஹாஸ்பிடல் கட்டும் அளவிற்கு இந்த பையனுக்கு பணம் எப்புடி வந்தது? எங்கிருந்து வந்தது? அவன் ஒன்னும் ராஜா பரம்பரையோ? அல்ல யமீன் வீட்டு வாரிஷோ இல்ல.... இத்தனைக்கும் பின்னால் யாரோ இருக்காங்க. விசாரணை செய்து கண்டுபிடிக்கணும்!" என்று கூறியுள்ளார். 

இந்த கருத்துக்கள் KPY பாலாவின் நற்பெயருக்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகின்றன. ரசிகர்களிடையே குழப்பத்தையும், எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement