தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு காணப்படும்.
தற்போது அவர் நடித்து வரும் “இட்லி கடை” படத்தின் கதை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையிலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வெளியான தகவல்படி, தனுஷ் இப்படத்தில் ஒரு சாதாரண மனிதராக நடிக்கிறார். அவருடன் நாயகியாக நித்யா மேனன், தங்கையாக ஷாலினி பாண்டே நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த தங்கை, செல்வந்தமும் செல்வாக்குமுமான குடும்பத்தில் திருமணம் செய்கிறார்.
அந்த குடும்பத்தின் தலைவராக சத்யராஜ் நடிக்கிறார் எனவும், மருமகனாக வரும் அருண் விஜய் பாக்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமணத்திற்கு பிறகு, இரு குடும்பங்களுக்குமிடையே மோதல் உருவாகி, அதனால் அண்ணன்-தங்கை பாசம் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதையின் மையமாக மாறும் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தனுஷ் – அருண் விஜய் இடையே நேரடி மோதல் காட்சிகள் இடம்பெறும் என ரசிகர்கள் ஊகிக்கின்றனர்.
மேலும், படத்தின் கிளைமாக்ஸ் எம் குமரன் சண் ஒவ் மஹாலக்சுமி பட பாணியில், sports action மற்றும் emotional sentiment கலந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இவை அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் தகவல்களே தவிர, படக்குழுவின் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இருந்தாலும், தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய் ஆகியோரின் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதி இட்லி கடை படம் வெளிவரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!