• Sep 15 2025

'இளைய சூப்பர் ஸ்டாரே..' இட்லி கடை பட விழாவில் மைபூசி அழிக்கப்பட்ட பேனர்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கி நடிக்கும்  இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.  

இதில் தனுசுடன் அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், சமுத்திரக்கனி, வடிவக்கரசி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். 

தனுஷ் இயக்கி நடிக்கும் நான்காவது படமாக இட்லி கடை படம் உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52 வது திரைப்படமாக அமைந்துள்ளது.  இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் முதலாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

இதில் பேசிய  தனுஷ், பொதுவாக படத்திற்கு நாயகனின் பெயரை தான் வைப்பாங்கள். ஆனால் என்னுடைய சின்ன வயசு அனுபவங்களை வைத்தும் நான் பார்த்த நிஜ மனிதர்களை வைத்தும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படித்தான் இந்த இட்லி கடை படம் உருவானதாக தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார். 


இந்த நிலையில்,  இட்லி கடை இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த தனுஷை 'இளைய சூப்பர் ஸ்டார்' வருக வருக என வரவேற்றுள்ளார்கள். 

இதை அவதானித்த தனுஷ் அங்கு வைக்கப்பட்ட பேனரையும் பார்த்துவிட்டு உடனே 'இளைய சூப்பர் ஸ்டார்' என்பதை அகற்ற சொல்லி உள்ளாராம். மேலும் தான் எப்போதும் எந்த பதவிக்கும், யாருடைய பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை என்று கூறியுள்ளாராம். 

இவ்வாறு இட்லி கடைப்பட விழாவில்  தனுஷை இளைய சூப்பர் ஸ்டாரே என வைக்கப்பட்ட பேனர்  டைட்டில் மட்டும் மை பூசி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement