• Sep 15 2025

பாட்டியோட இருந்து ரவுடி ஆகிட்டா.. முத்துவுக்கு சூடு வைத்த விஜயா.! டுடே ரிவ்யூ

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  பாட்டி வீட்டில் இருக்கும் முத்துவை விஜயா தெரியாமல் வந்து பார்க்கின்றார்.  இதன் போது முத்து  விளையாடும்போது அதில் ஒரு பையன் மீது தவறு இருப்பதாக அடித்து விடுகின்றார்.  அதனை விஜயா  பாட்டியிடம் சொல்ல,  நானும் விசாரித்தேன் அவன் மீது நியாயம் இருக்கின்றது.  அவன் சரியாகத்தான் வளர்கிறார் என்று சொல்லுகின்றார். 

இதை தொடர்ந்து முத்து விஜயாவுக்கு போன் எடுக்க,  மனோஜ்  தான் படிக்க வேண்டும்  நாளைக்கு எக்ஸாம் இருக்கு  என்று விஜயாவை கதைக்க விடாமல் பண்ணுகின்றார்.  அதன் பின்பு முத்து வளர்ந்து விட, மீண்டும் நம்ம வீட்டிற்கு போகலாம் என்று  விஜயா வந்து அழைக்கின்றார். 


ஆனால் நான் பாட்டியுடன் இருக்கின்றேன். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என முத்து அடம்பிடிக்கிறார் . ஆனாலும் விஜயா  முத்துவை கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்கின்றார். 

இறுதியில்  வீட்டிற்கு  சென்ற முத்துவுக்கு  அங்கு இருக்க பிடிக்கவில்லை.  முத்துவுக்கு உணவு பரிமாறும் போது மனோஜ் தனக்கு  ஆம்லெட் வேணும் என கேட்க, முத்துவுக்கு சாப்பாடு பரிமாறாமல் விஜயா சென்று விடுகின்றார். இதனால் கோபப்பட்ட முத்து  சாப்பாட்டை தூக்கி எறிகின்றார். 

இதன் போது அங்கு வந்த விஜயா,  இனிமேல் இப்படி பண்ணுவியா? பாட்டி வீட்டில் இருந்து ரவுடி ஆகிவிட்டா என்று முத்துவுக்கு சூடு வைக்கின்றார் . 

அதன் பின் பாட்டிக்கு கால் பண்ணிய முத்து, எனக்கு இங்க இருக்க பிடிக்கல.. அம்மா எனக்கு சூடு வைத்ததாக சொல்லுகின்றார் . இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement