தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ள தனுஷ், இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘இட்லி கடை’. இந்தப் படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான இசை வெளியீட்டு விழா, செப்டெம்பர் 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், படக்குழுவினர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தனுஷின் உரை நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக மாறியது. குறிப்பாக, படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அவர் பகிர்ந்த உருக்கமான பகிர்வுகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தனுஷ் பேசும் போது தெரிவித்ததாவது, "எங்கள் கிராமம் மற்றும் சென்னையில் நான் சந்தித்த மற்றும் என்னைப் பாதித்த கதாபாத்திரங்களை வைத்து கற்பனையாக உருவாக்கியது தான் 'இட்லி கடை'. இன்னும் சூப்பரான டைட்டில் வைத்திருக்கலாம் என்று கேட்கலாம்… ஒரு சில படத்தில் ஹீரோ பெயரையே டைட்டிலாக வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு ஹீரோ 'இட்லி கடை'.!"
இவ்விதமாக அவர் கூறிய உரையால், படம் ஒரு எளிமையான பெயரை தாங்கியிருந்தாலும் அதற்குள் பெரிய வாழ்வியல் கதைகள் ஒளிந்திருப்பது போல தெரிகிறது. “இட்லி கடை” என்ற தலைப்பே அதன் பின்னணி ஆழமாக இருக்கும் என்பதை வெளிக்காட்டுகிறது.
Listen News!