• Sep 14 2025

என்ன சொல்வதென்றே தெரியவில்லை... – இளையராஜாவின் மனதை உருக்கிய விழா அனுபவம்.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்த அற்புத இசைப் பயணத்திற்காக தமிழக அரசு சார்பில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அண்மையில் சென்னையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தொடர்ந்து, இசைஞானி இளையராஜா தற்போது வெளியிட்டுள்ள உணர்ச்சி மிகுந்த அறிக்கையானது ரசிகர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.


தமிழக அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இளையராஜாவின் 50 வருட இசை பயணத்தை கொண்டாடும் வகையில் ஒரு மாநில அளவிலான பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த இந்த விழா, அரசியல் எல்லைகளை தாண்டி, கலைக்கு அரசு தலை வணங்கும் அரிய தருணமாக அமைந்திருந்தது.

இதையடுத்து, இளையராஜா தனது அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்ன சொல்வதென்றே தெரியாத அளவுக்கு நேற்று எனக்கு ஆனந்தம்.

ஒரு பாராட்டு விழாவை அரசும், முதல்வரும், அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் இவ்வளவு சிறப்பாக, முழு ஈடுபாட்டுடன் எடுத்து நடத்தியதை நம்பவே முடியவில்லை. அந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டதால் விழாவில் என்னால் பேச முடியவில்லை." என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement