திரையுலகில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா ஒன்று அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் உள்ளிட்ட திரையுலகின் முக்கியமான பிரமுகர்கள் கலந்து கொண்டு இசைஞானியின் சாதனைகளை உணர்வுபூர்வமாக பாராட்டினர்.
தமிழ்த் திரையுலகிற்கு இசை அமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, அதன் பிறகு திரையுலக இசையின் வரலாற்றையே மாற்றியவர். அவரது இசையில் மேற்கத்தய சிம்பொனி, இந்திய ராகங்கள் ஆகியவை கலந்த ஒரு தனித்துவம் காணப்படும். 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து, உலகளாவிய அளவில் பரிசுகளை பெற்ற இவரது இசை, எல்லா தரப்பினரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த விழாவில், இசைஞானியின் நெருக்கமான நண்பர்களும், பல வருடங்களாக அவருடன் பணியாற்றிய திரையுலக பிரபலங்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பம்சம், உலகநாயகன் கமல் ஹாசன் உரையாற்றிய தருணம். தனது உரையின் முடிவில் அவர், "உன்னை ஈந்த உலகுக்கு நன்றி.... நம்மை சேர்த்த இயலுக்கும் நன்றி.... உயிரே வாழ்! இசையே வாழ்! தமிழே வாழ்!" என்ற பாடலையும் இளையராஜாவுக்காக பாடியிருந்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!