• Aug 12 2025

"மோனிகா" பாடலைப் பாராட்டிய மோனிகா பெலூச்சி.! பெருமிதத்தில் பூஜா ஹெக்டே.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இத்தாலிய நடிகை மோனிகா பெலூச்சியிடமிருந்து ஒரு சிறப்பான பாராட்டைப் பெற்றுள்ளார்.


தனது அழகு, நுட்பமான நடிப்பு மற்றும் ஸ்டைலால் உலக சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள மோனிகா பெலூச்சி, தற்போது வெளியான "கூலி" படத்தில் இடம்பெற்ற "மோனிகா..." என்ற பாடல் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். 

இந்த பாடலின் லிரிக்ஸ் மோனிகா என்ற தன்னுடைய பெயரில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக தற்பொழுது மோனிகா பெலூச்சி குறிப்பிட்டுள்ளார். 


மோனிகா பெலூச்சியின் பாராட்டுகள் பற்றிய செய்தி பூஜா ஹெக்டேவுக்கு தெரியவந்ததும், அவர் உண்மையிலேயே நெகிழ்ந்துவிட்டார். இதுகுறித்து பூஜா ஹெக்டே, “மோனிகா பெலூச்சி கூறிய இந்த வார்த்தைகள், எனக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே மிக முக்கியமான ஒன்று. அவருக்கு இந்த பாடல் பிடித்திருப்பதைக் கேட்க மிகவும் சந்தோசமாக உள்ளது." எனக் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement