சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, கிரிஷோட பாட்டி எங்கயோ போய்ட்டாங்க என்ற விஷயத்தை கேள்விப்பட்ட மனோஜ் இதுக்குத் தான் முன்ன பின்ன தெரியாத ஆட்களை வீட்டுக்குள்ள சேர்க்க கூடாது என்று சொல்லுறது என்கிறார். மேலும் இந்த பையன் இனிமேல் இங்க தான் இருக்கப் போறானா என்று விஜயாவைப் பார்த்துக் கேட்கிறார். அதுக்கு விஜயா அப்புடி எல்லாம் நான் இருக்க விடமாட்டேன் என்று சொல்லுறார்.
பின் விஜயா கிரிஷை ஆச்சிரமத்தில கொண்டு போய் விட்டிட்டு வரச் சொல்லுறார். அதைக் கேட்ட மீனா கிரிஷோட பாட்டி கண்டிப்பாக அவனைத் தேடி வருவாங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து மனோஜ் மீனாவை பார்த்து நீங்க இந்த கிரிஷை பார்த்துக்கணும் என்றால் தனியா வீடு எடுத்துப் பார்த்துக்கோங்க என்று சொல்லுறார்.
அதைத் தொடர்ந்து மீனா தன்ர அம்மா கிட்ட போய் கிரிஷோட பாட்டியைக் காணேல என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட மீனாவோட அம்மா கிரிஷைப் பார்க்க பாவமா இருக்கு என்கிறார். இதனை அடுத்து மனோஜ் ஸ்ருதியையும் ரவியையும் ரெஸ்டாரெண்டுக்கு கூப்பிட்டு அந்த கிரிஷ் நம்ம வீட்டில தங்க கூடாது அதுக்கு என்ன பண்ணணுமோ அத செய்வோம் என்கிறார்.
இதனை அடுத்து முத்து மீனா கிட்ட கிரிஷோட பாட்டி எங்க போயிருக்காங்க என்று தெரியல என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து மனோஜ் வந்து இவன்ட பாட்டி இன்னும் கிடைக்கலயா என்று அதிர்ச்சியோட கேட்கிறார். பின் முத்து கிரிஷைப் பார்த்து பாட்டியோட போட்டோ ஏதாவது இருக்கா என்று கேட்கிறார். அதுக்கு கிரிஷ் எதுவுமே இல்ல என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!