தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இவர், தற்போது பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு முக்கிய படத்தில் ஜோடியாக நடிக்கிறார். அதே நேரத்தில், தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'பாராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக 'மாஸ் ஜாதரா' என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் பணியாற்றுகிறார்.
இவற்றுடன், ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கும் 'ஜூனியர்' என்ற படத்திலும் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில், ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில், ஓர் குழந்தை சுறுசுறுப்புடன் ஓடுவது போன்று இடம்பெற்றுள்ளது,
இந்த வீடியோவுடன் “Running towards my icecream like” எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த இனிய பதிவு விரைவாக இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது தனித்துவமான அழகான பார்வை இந்த வீடியோவின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள், "இது மிகவும் க்யூட்!", "நீங்கள் எப்போதும் எனர்ஜெட்டிக்!" என பாராட்டி வருகின்றனர்.
Listen News!