இயக்குநர் h .வினோத் இயக்கத்தில் விஜய் ,பூஜா ஹெட்ஜ் ,பொப்பி தியோல் நடித்து வரும் திரைப்படம் "ஜனநாயகன் " தளபதி விஜய் அரசியலுக்குள் நுழைந்தமையினால் இது அவரது இறுதி படமாக இருக்கலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விரைவில் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவினை மிகவும் பிரமாண்டமாக நடத்துவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது. இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். குறித்த நிகழ்வினை நேரு மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
மேலும் இதற்கான நுழைவு டிக்கெட்டுகளை இலவசமாக ஆன்லைனில் வழங்குவதற்கு தீர்மானித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதைவிட இந்த நிகழ்வில் சாதாரண ரசிகர்கள் பிரபலங்கள் மாத்திரமின்றி அனைத்து பொதுமக்களுக்கும் சலுகை வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!