• Aug 06 2025

"கிங்டம்" படத்திற்கு கடும் எதிர்ப்பு...! நாம் தமிழர் கட்சியால் வெடித்தது போராட்டம்...!

Roshika / 12 hours ago

Advertisement

Listen News!

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள "கிங்டம்" திரைப்படம் வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த திரைப்படத்திற்கு எதிராக இன்று காலை நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டக்காரர்கள், "கிங்டம்" திரைப்படத்தில் தமிழர்களின் மரபு மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய திரையரங்குகளிலும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.


நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள், "கிங்டம்" திரைப்படம் சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினர். திரைப்படத்திற்கு எதிராக கூச்சலிட்டு பதாதைகள் ஏந்தி திரையரங்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தின் பின்னர், திரையரங்கு நிர்வாகம் பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, எல்லா காட்சிகளையும் ரத்து செய்ய முடிவு செய்ததாக தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விஜய் தேவரகொண்டா மற்றும் திரைப்பட இயக்குநர் அண்மையில் பதிலளிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விவாதம் வெடித்துள்ளது.


Advertisement

Advertisement