‘கனா’ திரைப்படத்தில் அறிமுகமான தர்ஷன், அதன் பிறகு 2019ஆம் ஆண்டு வெளியான ‘தும்பா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது அவர், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள புதிய படமான ‘ஹவுஸ் மேட்ஸ்’-இல் நாயகனாக நடித்துள்ளார்.
காமெடி ஹாரர் வகை திரைப்படமான 'ஹவுஸ் மேட்ஸ்' படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions மற்றும் Playsmith Productions இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் கதை, ஒரு இளைஞன் வீடு வாங்கிய பிறகு அதில் நேரும் அமானுஷ்யமான மற்றும் நகைச்சுவையூட்டும் சம்பவங்களைச் சுற்றி செல்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் எதிர்பாராத சூழ்நிலையில் சிக்கி போராடும் விதம், அதில் வரும் நகைச்சுவை மற்றும் ஹாரர் கலவையான காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.
தர்ஷனின் வேறுபட்ட நடிப்பு, காளி வெங்கட் மற்றும் தீனாவின் நகைச்சுவை தருணங்கள், மற்றும் அமானுஷ்யமான பின்னணி எல்லாம் சேர்ந்து ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தை ஒரு புதுமையான அனுபவமாக மாற்றி இருக்கின்றன. ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.
Listen News!