மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு புதிய பரிமாணம் சேர்க்கும் வகையில் ‘லோகா’ என்ற புதிய படம் உருவாகியுள்ளது. ‘மின்னல் முரளி’க்கு பிறகு இது அந்த வகையில் உருவாகும் அடுத்த மிக முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
டொமினிக் அருண் இயக்கும் இந்த படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை கல்யாணி நடித்திராத விதமான வித்தியாசமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் அவரை காணும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் கிடைக்கப்போகிறது.
இந்தப் படத்தை பிரபல நடிகர் துல்கர் சல்மானின் வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இப்படம் ஒரு தனி படம் மட்டும் அல்ல; பல பாகங்களில் உருவாகும் ஒரு சினிமாடிக் யூனிவர்ஸின் தொடக்கமாகும் என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது. சந்து, சலிம் குமார், அருண் குரியன், மற்றும் சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது மற்றும் டீசர் வெளியீட்டு தேதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகா திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் மலையாள சினிமாவின் சூப்பர் ஹீரோ ஜானரில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கப்போகிறது என்பது உறுதி!
Listen News!