சின்னத்திரையில் பிரபலமானவர்தான் நடிகை ஜாக்குலின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தொகுப்பாளினியாகவும் காணப்பட்டார். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது.
இவ்வாறு சீரியல்களில் நடித்து வந்த ஜாக்குலின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் ஒவ்வொரு வாரமும் நாமினெட் செய்யப்பட்டாலும் மக்களால் காப்பாற்றப்பட்ட ஒரு போட்டியாளராக காணப்பட்டார்.
பிக்பாஸ் வரலாற்றிலேயே கிட்டத்தட்ட 15 வாரங்கள் நாமினேட் செய்யப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்ட ஒரே ஒரு போட்டியாளராக ஜாக்குலின் காணப்படுகின்றார். இவர் இறுதியாக பைனலுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பிக் பாஸில் இடம் பெற்ற பணபெட்டி டாஸ்க்கில் எலிமினேட் ஆகி வெளியே சென்றிருந்தார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் முதலாவது ரன்னரப்பாக சௌந்தர்யாவும் வெற்றி பெற்றனர். அதன்பின் வெளியில் வந்த பிக்பாஸ் பிரபலங்களை பல சேனல்களும் போட்டி போட்டு பேட்டி எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜாக்குலின் வழங்கிய பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகின்றது. அதில் ஜாக்குலினிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
இதன்போது ரசிகர் ஒருவர் அவரை பார்த்து நீ லெஸ்பியனா? என கமெண்ட் பண்ணி இருந்தார் அது பற்றி வினாவப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜாக்குலின், பொதுவாகவே மூன்று பெண்கள் ஒன்றாக போட்டோ போட்டால் அப்படித்தான் தவறாக எண்ணுகின்றார்கள். அவர்களை நினைக்கும் போது கோபம் தான் வரும்..
இதன் போது உனக்கு என்ன பைத்தியமாடா? அவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்குது என பதிலடி கொடுக்க தோன்றும் என தெரிவித்துள்ளார்.
Listen News!