• Dec 26 2024

' 21' படத்தின் புதிய அப்டேட் ..." எதிர்பாராததை எதிர்பாருங்கள்"விஷ்ணு விஷாலின் திடீர் பதிவு ...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

 நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த  'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.


அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ராட்சசன்.சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான இப்படத்தை இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்தார்.இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்ததோடு விஷ்ணு விஷாலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது.


விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணி 'விஷ்ணு விஷால் 21' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


 இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடத்தப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் தொடர்ந்து 20 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களமே கொடைக்கானல் என்று தகவலும் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது குறித்த தகவலை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஷ்ணு விஷால் 21 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. பணியில் இயக்குனர் ராம்குமார் உடன்... எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் திடீர் பதிவை பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக இருக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் .  


Advertisement

Advertisement