• Apr 24 2026

24 வயதுடைய இளம் நடிகை மாரடைப்பால் மரணம்! பேரதிர்ச்சியில் திரையுலகினர்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்த, இளம் நடிகை லக்ஷ்மிகா சஜீவன் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பரிதமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காக்கா என்ற குறும் படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் லக்ஷ்மி சஜீவன் கவனம் பெற்றிருந்தார். மேலும் அவர் பஞ்சவர்ண தாத்தா, சவுதி வெள்ளளக்கா, உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


இவர் துபாயின் ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி உள்ளதோடு,  நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.


இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அவருக்கு 24 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement