• Apr 24 2026

'பூர்ணிமா பெரிய அளவில் நல்லா வருவா' பிக்பாஸ் வீட்டுல இதனாலதான் சரியா பேசமுடியல..! உண்மைகளை உளறிய இந்துஜா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ்  சீசன் 7ல் ஒருசில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டிற்கு பார்க்கிங் திரைப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண்,  ஹீரோயின் இந்துஜா அவர்களும் வருகை தந்திருந்தார்கள். எனினும், இந்துஜாவின் உயிர் தோழியான பூர்ணிமாவை பெரிதாக கண்டுகொள்ளாதது பூர்ணிமா ரவியை மனமுடைய வைத்திருக்கிறது.  

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் 'மேயாத மான்' படத்தின் மூலம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒருவர். இவர் இதுவரை தளபதி விஜய்யுடன் 'பிகில்' படத்திலும், தனுஷுடன் செல்வராகவனின் 'நானே வருவேன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த வார புதிய திரைப்படமான 'பார்க்கிங்' படத்தில் இந்துஜா முக்கிய பெண் நாயகி. இப்படம் ஏற்கனவே பத்திரிகை நிகழ்ச்சிகளில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது.


இதற்கிடையில், முன்னாள் 'பிக் பாஸ்' போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் 'பார்க்கிங்' விளம்பரத்திற்காக 'பிக் பாஸ் தமிழ் 7' இல் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய போட்டியாளர் பூர்ணிமா பின்னர் தனது நெருங்கிய கல்லூரி தோழியான இந்துஜா தன்னை புறக்கணித்ததாக தனது ஏமாற்றத்தை மாயாவிடம் பகிர்ந்து கொண்டார். இதை தொடர்ந்து இந்துஜாவின் சமூக வலைத்தளங்களை நோட்டமிட்ட ரசிகர்கள் அவர் பூர்ணிமாவை அன் ஃபாலோ செய்து விட்டார் என ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். 


இந்த நிலையில், 'பார்க்கிங்' படத்தின் வெற்றிவிழாவில் இந்த சம்பவம் தொடர்பில்  இந்துஜாவிடம் கேட்கப்பட்டது. இதன்போது பதிலளித்த இந்துஜா,

'நாங்க படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் போனோம். எங்களுக்கு பல விதிமுறைகளை சொல்லித்தான் உள்ளயே அனுப்பினாங்க. அத்தோட யாரும் யாருக்கும் ஃபேவரைட் காட்டாதீர்கள் என வீட்டிற்குள்ளே நானே  சொல்லியிருப்பேன். 

நானும் பூர்ணிமாவும் கல்லூரி தோழிகள். பொதுவாகவே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் நாங்கள் பேசிக் கொள்வோம். மற்ற படி பூர்ணிமா ஒரு இனிமையான பெண். அவர் நன்றாக விளையாடி வருகிறார். ஆனாலும் ஒரு சில விஷயங்களை தவிர்த்தால் இன்னும் பெரிய அளவில் பூர்ணிமா வருவார்' என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement