• Oct 26 2024

3 தோற்றத்தில் நடிகர் டோவினோ தாமஸ்... வெளியானது ஏஆர்எம் மிரட்டும் ட்ரெய்லர்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான ஏஆர்எம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.தமிழில் மாரி -2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ்.


மலையாளத்தில் 2012 முதலே நடிக்க ஆரம்பித்தவர் என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என பல நல்ல படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஜிதின் லால் இயக்கத்தில் ஏஆர்எம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இதில், மூன்று தோற்றங்களில் டோவினோ வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது, பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.


Advertisement