• Dec 26 2024

விஜய் டிவி 'புகழ்' நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ்! அதில் காத்து கருப்பு கலையும் நடிக்கின்றாரா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் புகழ். இவர் பிரபல கலைஞராக காணப்படுகின்றார். இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மேலும் பெருமை சேர்த்தது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்த பிரபலங்களுள் இவரும் ஒருவர். இதுவரை புகழ் நடித்த படங்கள் பெரிதளவில் பேசப்படவில்லை என்றாலும் அவர் தொடர்ந்தும் தனது முயற்சியை கைவிடாமல் படங்களில் நாயகனாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், ஆர். எஸ் மணிகண்டன் மற்றும் மகேஷ்வரன் கேசவன் தயாரிப்பில் புகழ் நடிக்கும் திரைப்படம் தான் 'Four சிக்னல்'. இந்த திரைப்படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது காதலும் உணர்வுகளும் கலந்த இந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.


இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி சண்முகநாதன் பிலிம்ஸ் மற்றும் கேஷவ் ப்ரொடக்ஷன், ஆர். எஸ் மணிகண்டன் ஆகியோர் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன் கேசவன் இயக்கத்தில் விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக களம் இறங்கி உள்ளார்.

அறிமுக இயக்குனரான மகேஸ்வரன் கேசவன் காதலுடன் கலகலப்பான திரைப்படமாக  'Four சிக்னல்' படத்தை உருவாக்கியுள்ளார். நகரங்களில் வசிக்கும் ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தி எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றித்தான் இந்த கதை நகர்ந்து உள்ளதாம்.

மேலும் சென்னையில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநர்களுக்கும் இடையில் நடக்கும் ஆரோக்கியமான சம்பவங்களின் தொகுப்பாக இந்த திரைப்படம் காணப்படுகின்றது.

இந்த படத்தில் அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Advertisement

Advertisement