சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பலரும் போட்டி போட்டு தமது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே சரியான வாய்ப்பை பெற்றுக் கொடுக்கின்றது. அந்த வகையில் விஜய் சேதுபதி, அஜித் குமார், நடிகர் சூரி உட்பட பல பிரபலங்கள் காலங்கள் கடந்து வெற்றி பெற்றவர்களாக ஜொலித்து வருகின்றார்கள்.
தற்போது இவர்களுடைய வரிசையில் பல இளம் நடிகர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதற்காக வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்கள். அவர்களும் முக்கியமானவர்களாக நடிகர் கவின், பிரதீப் ரங்கநாதன், மணிகண்டன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் காணப்படுகின்றனர்.
d_i_a
ஆரம்பத்தில் சின்னத்திரையில் சீரியல் நடிகராக காணப்பட்டவர் கவின். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பண பெட்டியுடன் வெளியேறி இருந்தார். தற்போது வெள்ளித்திரையில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார்.
அவரைப் போலவே பிரதீப் ரங்கநாதனும் தனது விடாமுயற்சியின் காரணமாக முன்னேறியவர். இவர் இயக்குனராகவும் நடிகராகவும் காணப்படுகின்றார். ஹரிஷ் கல்யாணும் தனக்கு ஏற்ற வகையில் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்களைத் தொடர்ந்து குட் நைட் படத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் மணிகண்டன். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதில் இவருடைய நடிப்பு பலரையும் பிரம்மிக்க வைத்தது. அதன் பின்பு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் குறித்த நான்கு நடிகர்களுக்கு மத்தியிலும் மணிகண்டன் தான் மாணிக்கமாக தெரிகிறார் என சமூக வலைத்தள பக்கங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
அதாவது நடிகர் கவின் தற்போது படங்களில் பிசியாக நடித்து வந்த போதிலும் அவர் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் மிகப்பெரிய குடச்சலை கொடுத்து வருகின்றார். அதேபோல் பிரதீப் ரங்கநாதனும் தயாரிப்பாளர்களுடன் பிரச்சனை ஏற்படுத்தி உள்ளார்.
ஹரிஷ் கல்யாண் தான் நடிக்கும் படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டு பேராசைப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் இவர்களுடன் ஒப்பிடும்போது மணிகண்டன் தான் மாணிக்கமாய் தெரிகிறார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!