தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகைகளில் ஒருவர் ரெஜினா. இவர் தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டுள்ளார். ரெஜினா இறுதியாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
அந்தப் படம் பிப்ரவரி 6 வெளியாக உள்ள நிலையில் ரெஜினா பல நேர்காணலில் கலந்து வருகின்றார். சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவருடன் இணைந்து நடித்த அர்ஜுன் பற்றி கூறியுள்ளார்.
அந்த நேர்காணலில், ஆக்சன் கிங் அர்ஜுன் சார் பற்றி கட்டாயம் கேட்க வேண்டும் என நடுவர் கூறியிருந்தார். அதற்கு ரெஜினா அவருடன் வேலை செய்யும் போது அதிகளவு என்டர்டைன்மெண்ட் ஆக இருந்ததாகவும் அவர் ஆக்சன் பண்ணுறத பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவும் கூறியிருந்தார்.
அத்துடன் எனக்கு அவருடன் வேலை செய்யும் போது தான் ஏன் எல்லாரும் அவரை ஆக்சன் கிங் என்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தது என்றதுடன் அவங்க இடத்துக்கு இன்னும் யாருமே வரல என்றும் கூறினார். அர்ஜுன் சார் ரொம்ப அமைதியான person என்றதுடன் அவர் நிறைய ஜோக் அடித்து ஜாலியாக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!