• Dec 27 2024

50 வருட நட்பு இன்று இல்லை! இயக்குநர் மறைவால் உருகும் நடிகர் கமல்...

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.


பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இவருடைய மரணச் செய்தி பலருக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் இவரின் மறைவு குறித்து டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 


அந்த பதிவில் "மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் கலைஞர் எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.  'கன்யாகுமரி” படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான 'மனோரதங்கள்' வரை அந்த நட்பு தொடர்ந்தது. மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். இவரின் மறைவு திகைப்பையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. இது பேரிழப்பு, தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement