• Dec 26 2024

58 வடைக்கு ரசீது எங்கப்பா? கங்குவா படக்குழுவினருக்கு குடைச்சல் கொடுத்த பிரபலம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவின் இரண்டு வருட கடின உழைப்பிற்கு பிறகு வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படம் 38 மொழிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி இருப்பதாக கூறப்பட்டது. மேலும் 2000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் எனவும் இதன் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

கங்குவா படத்தில் முதல் நாள் காட்சியை பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் மூன்று பாகுபலி படத்தை பார்த்தது போல் உள்ளது. அவதார் படத்தை பார்த்தது போல் உள்ளது என்று மிகப்பெரிய அளவுக்கு தமது விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். ஆனாலும் ஒரு சிலர் இந்த படத்தில் பெரிதாக சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை. சூர்யாவின் அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய தொடங்கின. மேலும் இதில் எதற்கு கத்துறாங்கன்னு தெரியல, சாங் சிஸ்டம் சரியில்ல, பாட்டுகள் கூட பெரிதாக ஈர்க்கவில்லை ஆனால் இதில் திஷா பதாணியின் கவர்ச்சி தான் எடுப்பாக இருக்கின்றது என்று படம் பார்த்தோர் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

d_i_a

எனினும் கங்குவா திரைப்படம் வெளியாகி 58 கோடிகளை முதல் நாளில் வசூலித்திருந்தது. இதன் இரண்டாம் நாளான இன்றைய தினம் 20 கோடிகளை வசூலித்து இருக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு இருந்தன. ஆனாலும் இரண்டாவது நாளுக்கான வசூல் விவரம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.


இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தை வழக்கம் போல கலாய்த்து உள்ளார். அதன்படி 58 வடைக்கு ரசீது எங்க? சீக்கிரம் சொல்லப்பா எல்லாருக்கும் ஏகப்பட்ட ஜோலி கிடக்கு.. என தயாரிப்பாளரை கிண்டல் செய்துள்ளார்.

அதாவது கங்குவா படத்தின் வசூலை ஒவ்வொரு தடவையும் கலெக்ஷன் வெளியாகும் போது அதன் உண்மை ஜிஎஸ்டி   ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று சொல்லியிருந்தார். தற்போது அதற்கான ரசீது எங்கே என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து உள்ளார்.

Advertisement

Advertisement