• Dec 26 2024

எதிர்க்கட்சியின் 60 சதவீத ஓட்டும் விஜய்க்கு தான்.. ஆணித்தரமாக கணித்து சொன்ன அரசியல் சாணக்கியன்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் அரசியலை மையப்படுத்தியே எடுக்கப்பட்டதாக காணப்பட்டன.

அதிலும் குறிப்பாக கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்களின் வாயிலாக வெளிப்படையாகவே சில அரசியல் கட்சிக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்தார் நடிகர் விஜய்.

இதை தொடர்ந்து அண்மையில் தான் 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயருடன் தனது கட்சியை பகிரங்கமாகவே அறிவித்து, கோடிக்கணக்கான ரசிகர்களின் வாக்குத் துணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார்.


இந்த நிலையில், காலத்தின் கட்டாயத்தால் அரசியல் கால் பதித்த தளபதி விஜய், தனிப்பெரும் சக்தியாக மாறுகிறார் என தேர்தலில் தான் சார்ந்த கட்சியை ஜெயிக்க வைக்கும் அரசியல் சாணக்கியாலும், மோடியின் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் கணிப்புகளை கூறியுள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில்,

விஜய் என்னிடம் உதவி கேட்டால் அவருக்கு அட்வைஸ் கொடுப்பேன். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் முழு நேர ஆலோசகராக  மாற மாட்டேன் என்று கூறியிருந்தார். 

 

ஆனால் திமுக மற்றும் அதிமுக இவர்களுக்கு மாற்றாக ஒரு மாபெரும் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார். இவர் தேர்தலில் போட்டியிடும் போது இந்த இரு கட்சிக்களுக்கும் எதிராக மாற்றத்தை விரும்புபவர்கள் இவரை தேர்ந்தெடுக்க கூடும் என்பதால் திராவிடக் கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை 60 முதல் 80 வரை குறையலாம்.

அதேவேளை, பாஜகவை முன்னேற விடாது தனிப்பெரும் ஆளுமையாக விஜயின் கட்சி உருவெடுக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் முதலில் விஜய் மக்களிடம் சென்று பேச வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement