• Dec 27 2024

60 வயது நடிகரை திருமணம் செய்த 44 வயது நடிகை.. 1500 கோடி ரூபாய் சொத்துக்காகவா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


60 வயதில் பிரபல நடிகை ஒருவர் நான்காம் திருமணம் செய்திருக்கும் நிலையில் அவரை 45 வயது நடிகை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடிகருக்கு 1500 கோடி ரூபாய் சொத்து இருப்பதால்தான் அவரை அந்த நடிகை திருமணம் செய்து இருப்பதாகவும் வதந்தி ஒன்று கிளம்பி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் நடிகர்களில் ஒருவர் நரேஷ் பாபு என்பதும் இவர் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து விவாகரத்து செய்துள்ள நிலையில் தற்போது நான்காவது ஆக நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

 இருவரும் சில மாதங்கள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட சில படங்களில் நடித்துள்ள நடிகை பவித்ரா லோகேஷ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர் என்பதால் தான் நரேஷ் பாபுவின் 1500 கோடி சொத்துக்காக அவரை திருமணம் செய்து கொண்டதாக அவரது முன்னாள் கணவர் சுரேந்திர பிரசாத் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் நரேஷ் பாபு மீது  தனக்கு உண்மையான காதல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று தனக்கு தெரியாது என்றும் பவித்ரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement