• Dec 28 2024

சந்தானத்தின் படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த ரசிகர்! அவர் சொல்லும் காரணத்த கேட்டா சிரிச்சுருவிங்க?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானதும் அவர்களின் கட்டவுட்டுகளுக்கு மாலை அணிவித்து  ,பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடுவர். இவ்வாறே சமீபத்தில் வெளியாகும் சந்தானத்தின் "இங்க நான்தான் கிங்கு" என்ற திரைப்படதிற்காக ரசிகர் செய்த செயல் வைரலாகின்றது.


கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் இங்க நான்தான் கிங்கு ஆகும். குறித்த திரைப்படமானது இன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர் ஒருவர் ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.


அவர் சந்தானத்தின் கட்டவுட்டுகளுக்கு பாலபிஷேகம் மற்றும் சந்தன அபிஷேகம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி படம் பார்க்க வந்த பெண்களுக்கு பலாப்பழமும் வழங்கியுள்ளார். அவரிடம் இவ்வாறு வழங்கியதற்காண காரணத்தை கேட்டபோது இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை வழங்கவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கூறிவிட்டு பாலினால் அபிஷேகம் செய்யலாமா என நெட்டிசன்கள் குறித்த நபரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்     

Advertisement

Advertisement