• May 20 2026

கேரியரின் உச்சத்தில் இருந்தவர் இப்போ அரசு ஊழியர் மாதிரி செயல்படுறாரு.!பார்த்திபன் சொன்னது?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும், சிறந்த தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டு திகழ்ந்து வருபவர் பார்த்திபன். இவர் பொது மேடைகளில் பகிரும் சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது புதுமுக நடிகர்களை வைத்து ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மீரா கதிரவன். இந்த படம் இஸ்லாமிய குடும்ப பின்னணியில் உருவாகியுள்ளது. இதில் கஸ்தூரிராஜா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், தமிழக முதலமைச்சர் விஜய் பற்றி பேசியுள்ளார். தற்போது அவர் பேசிய கருத்துக்கள் வைரல் ஆகி வருகின்றன. அதன்படி அவர் கூறுகையில்,

ஒரு தனி மனிதனோட நம்பிக்கை ஜெயிச்சு இன்னைக்கு அவர் இவ்வளவு தூரம் வந்திருக்காரு. நான் அவர வரவேற்றேன். அவர் ஒரு கேரியர்ல உச்சத்துல இருக்குற மனுஷன், 200 கோடி சம்பாதிச்சத விட்டுட்டு இங்க வந்திருக்காரு, அத பாராட்டணும்னு சொன்னேன். அத பத்தி நிறைய எதிர்க்கருத்துகளும் இருந்தது.


ஆனா இன்னைக்கு கேரியர்ல உச்சத்துல இருந்தவர், இப்ப சிஎம் ஆகி இருக்காரு. இன்னைக்கு மதியம் கூட ஒரு அரசு ஊழியர் மாதிரி சாப்பாடு எடுத்துட்டு வராரு. காலை 9:30க்கு சரியா வராரு, மாலை வரைக்கும் இருக்காரு. இதெல்லாம் பாத்தா நிறைய பேருக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு, ஒரு பிரமிப்பா இருக்கு.

அவர் வந்த நாலு நாளுக்குள்ளயே நிறைய விஷயங்களை பண்ணிருக்காரு. கமல் சார் கூட பார்த்து ஆறு விண்ணப்பங்களையும் கொடுத்திருக்காருன்னு சொல்றாங்க. சிறுபான்மை மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்யணும்னு அவர் நினைக்குறாருன்னா, அந்த சிறுபான்மை மக்கள்ல சினிமால சின்ன படங்கள் எடுக்குறவங்களும் வராங்க. நல்ல படங்களை ரிலீஸ் பண்ண கூட வாய்ப்பு இல்லாம நிறைய கஷ்டப்படுறாங்க. அப்படிப்பட்ட படங்களுக்கு அரசாங்கம் நிச்சயமா உதவணும்னு ஒரு அன்பான வேண்டுகோள்.

இந்த படம் கூட நேசம் ப்ரொடக்ஷன்ஸ் தான் பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன். நேசத்தை ப்ரொட்யூஸ் பண்ணுறதுதான் ரொம்ப கஷ்டம். ஆனா அந்த நேசம் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படம் எடுத்திருக்காங்கன்னா, அதோட கருத்துக்கும் அது ரொம்ப பொருத்தமா இருக்கு.

மீரா கதிரவன் அவர்களுக்கு மறுபடியும் என்னோட அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றி.. என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement