• May 20 2026

எதிர்பார்ப்பை எகிறவைத்த சிவராஜ்குமாரின் 'பெயில்' திரைப்பட டீசர்! அந்த சீன் தான் ஹைலைட்டே

shali / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் 1974ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீனிவாச கல்யாண’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்ப காலத்திலேயே தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், தொடர்ந்து பல்வேறு வகை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு கன்னட சினிமாவில் தனக்கென ஒரு தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டார். 

இதுவரை 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது அவரது நீண்ட அனுபவத்தையும் உழைப்பையும் காட்டுகிறது. தமிழ் சினிமாவிலும் இவர் தற்போது அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளார். 


குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அவரது தோற்றம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருவது எதிர்பார்ப்பை அதிகரிக்கவைத்துள்ளது. 

இதற்கிடையில், இயக்குநர் பவன் வடேயார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெயில்’ என்ற புதிய ஆக்சன் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். 

கேவின் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சஞ்சனா ஆனந்த், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, ஜெயராம், சாய் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் வருகிற வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு 2026 ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் தற்போது வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement