• Dec 28 2024

நடுவீட்டில் விடாப்பிடி பிடித்த விஜயா... விளக்கெண்ண என ரோகிணியை திட்டிய முத்து! வெடித்தது பூகம்பம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், இன்றைய எபிசோட்டில் மீனா சமைத்து விட்டு எல்லாரையும் சாப்பிட கூப்பிட, விஜயா வராமல் இருக்கிறார். அண்ணாமலை வரலையா? என கேட்கவும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்கிறார். மேலும் என் பிள்ளையை பார்க்காமல் சாப்பிட மாட்டேன். பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

மனோஜ் வாமா சாப்பிடலாம் என்று கூப்பிட, எனக்கு வேண்டாம் என விஜயா சொல்ல, ரோகிணியை சாப்பிட கூப்பிடுகிறார். அவர் ஆண்ட்டி  வராமல் எப்படி சாப்பிடுவது என மனோஜையும் தடுத்து விடுகிறார்.

மேலும், ரோகிணி விஜயாவுக்கு ஆதரவாக பேசிக் கொண்டு இருக்க, விளக்கெண்ண என பேசிய முத்து, பாலர் அம்மாவுக்கு கொஞ்சம் கைல எடுத்துக் கொடு, அப்படியே எறிர நெருப்புல ஊத்தி விடுவாங்க என சொல்லுகிறார்.

மறுபக்கம் ரவியை சந்தித்து பேசிய விஷயத்தை அவர் ஹோட்டலில் தங்கி இருக்கும் விஷயத்தையும் சொல்கிறார் முத்து. இடையில் விஜயா பேசியதற்கு எல்லாமே குறுக்க குறுக்க கவுண்டரையும் போடுகிறார்.


அண்ணாமலையை சாப்பிட்டு விட்டு மாத்திரை போடுமாறு  சொல்ல, நீ சாப்பிடாமல் நானும் சாப்பிட மாட்டேன் என்று அவரும் சாப்பிடாமல் இருக்க, ஆண்ட்டி சாப்பிடாமல் நாங்களும் சாப்பிட மாட்டோம் என்று ரோகிணியும் மனோஜை பிடித்து வைத்துக் கொண்டுள்ளார். மீனாவை சாப்பிட சொல்ல நீங்க எல்லாம் சாப்பிடாமல் நானும் சாப்பிட மாட்டேன் என்பது போல அவரும் இருக்கிறார்.

இதனால் அப்பா சாப்பிட்டால் தான் அம்மாவை சாப்பிட வைக்க முடியும் என முடிவெடுத்த முத்து பிளான் ஒன்றை போடுகிறார். அத்துடன் இப்படியே ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பாத்துக்கிட்டே இருங்க இந்தா வந்துடுறேன் என்று வெளியே கிளம்பி செல்கிறார்.

இதை தொடர்ந்து, டப்பிங் பேசி முடித்த பின்பு ஸ்ருதி சாப்பிட ரூம்க்கு செல்ல, அங்கு ரவி சாப்பாட்டுடன் நிற்கிறார். சாப்பாடு தான் ஆர்டர் பண்ணேன் செப் ஆர்டர் பண்ணல என்று சொல்ல, அப்ப நான் போகவா என கிளம்புகிறார் ரவி. அதற்கும் நான் போக சொல்லலையே தடுக்கிறார் ஸ்ருதி.

ஹோட்டல சாப்பாடு ஆர்டர் பண்ணா நீ எடுத்துட்டு வருவான்னு எனக்கு தெரியும் என்று ஸ்ருதி சொல்ல, நான் வரணும் என்று தான் நீயும் ஆர்டர் பண்ணி இருப்பா என்று எனக்கும் தெரியும் என்று ரவியும் சொல்கிறார்.

மேலும் உன் முடிவில் ஏதாவது மாற்றம் இருக்கா? எப்ப வீட்டுக்கு போகலாமே கேட்க, டப்பிங் முடிச்சிட்டு வீட்டுக்கு தான் போக போறேன் என ஸ்ருதி சொல்கிறார். அதற்கு ரவி நம்ம வீட்டுக்கு எப்ப போகலாம் என கேட்க, வீட்ல நாம இல்லாதத எல்லாரும் மிஸ் பண்றாங்க, முத்து வந்து பேசின விஷயத்தையும் சொல்ல, என்னையும் மீனா சந்திச்சு பேசினாங்க சாரி கேட்டாங்க என்று ஸ்ருதி சொல்லுகிறார். மேலும் நீ வீட்டுக்கு போயிட்டேன்னு நினைச்சேன் ஆனா போகலையா என்று கேட்க, இல்ல ரெஸ்டாரண்ட்ல தான் தங்கி இருக்கிறன்.  நீ எப்ப வாரியோ அப்பதான் நானும் போவேன் என்ன சொல்லுகிறார்.

இதைத் தொடர்ந்து மனோஜ் ரொம்ப பசிக்குது என்று சாப்பிட கூப்பிட உனக்கு மட்டும் சாப்பாடு கேக்குதோ என கோபப்படுகிறார். இதனால் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு இருக்கிறார் மனோஜ்.

இதையடுத்து இவர் எங்க போனார்னு தெரியல என மீனா சொல்லிக் கொண்டிருக்க, இங்க இருந்தா சாப்பிட முடியாதுன்னு ஹோட்டலுக்கு போய் இருப்பான் என்று மனோஜ் சொல்ல, மீனா மனோஜை பார்த்து முறைக்கிறார்.

அதன் பின்பு அண்ணாமலையிடம், அப்பா பாவக்காய் சாம்பார் என்றுதானே சொன்னீங்க ஆனா எனக்கு பிரியாணி வாசனை வருது என்று சொல்லும் போது, நீ படிச்ச அறிவாளி கரெக்டா தான் சொன்னா என கையில் பிரியாணியோடு முத்து வீட்டுக்கு வருகிறார்.

டேபிளில் இருக்கும் எல்லாவற்றையும் எடுக்கச் சொல்லிவிட்டு அதில் வாழை இலை போட்டு பிரியாணியை கொட்டுகிறார். மேலும் இது பிரியாணி தாண்டா ஆனால் பிரசாதம் என்று சொல்லுகிறார். இந்த வாசனையை பிடித்த விஜயா என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement