• Jan 21 2025

விழுந்து விழுந்து வேலை செய்யும் கோபி..! பாக்கியாவுக்கு வந்த புதிய சிக்கல்..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்கள் மனம் கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வருவது பாக்கியலட்சுமி சீரியல். இதன் இன்றைய நாள் எபிசோட் குறித்து பார்ப்போம். இன்று பாக்கியா ராதிகாவிடம் இந்த ஒரு ஆர்டருக்கு மட்டும் தான் கோபியோட ஹெல்ப் கேட்டேன் அதுக்கு அப்புறம் வர ஆர்டர் எல்லாத்துக்கும் ஆட்களை நானே ரெடி பண்ணிடுவேன் என்று சொல்கிறார். எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை ஏன் நான் ஹெல்ப் தரேன்னு சொன்னத வேணான்னு சொல்லிட்டிங்க என்று கேட்கிறார்.


அதற்கு பாக்கியா தெரியாதவங்க கிட்ட கூட ஹெல்ப் கேட்கலானாம் சொந்தக்காரங்க கிட்டையோ பிரண்ட்ஸ் உங்க கிட்ட கேட்கவே எனக்கு விருப்பம் இல்ல அவ்வளவு தான் வேற ஒன்னும் கிடையாது என்று சொல்கிறார். மறுநாள் காலையில் ஈஸ்வரி கிச்சனில் சாப்பாடு வேலை ஆரம்பிக்கும் முன்  பூஜை செய்து ஆரம்பித்து வைக்கிறார். பாக்கியா பிளான் எல்லாம் சொல்லி பேசிக்கொண்டிருக்க கோபி வேட்டி சட்டையில் வந்து நிற்கிறார்.  


ஆர்டரை யோசிச்சு தூக்கம் வரலாமா அதனால தான் வந்தன் என்று ஈஸ்வரியிடம் சொல்கிறார்.  பிறகு வேலை தொடங்கி எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருக்க பாக்கியா எல்லா இடத்திலும் என்ன வேலை பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருக்க கோபி ஈஸ்வரி இடம் இப்படி பம்பரமா வேலை செய்றத நான் பார்த்ததே இல்லம்மா என்று சொல்ல அவர் வேலைன்னு வந்துட்டா ரொம்ப சுறுசுறுப்பாயிடுவா என்று சொல்கிறார் ஈஸ்வரி. எழில் அமிர்தா இருவரும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க நீங்க எதுக்கு இன்னும் வேலை பார்த்து கிட்டுருக்கீங்க எழுந்து வாங்க என்று பாக்கியா கூப்பிட எழில் வர மறுக்கிறார்.


நீ டைரக்டர டா என்று சொல்ல வெளியே தான் டைரக்டர் எங்க அம்மாவுக்கு நான் பையன்தானே நான் செய்வேன் என்று இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து கோலா உருண்டை வேண்டும் என்று ராஜசேகர் மேனேஜர் ஃபோன் பண்ண பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறார். மட்டன் கோலா உருண்டை செய்ய மட்டன் அவ்வளவு இப்ப கிடைக்காது என்று யோசிக்க அமிர்தா வாழைப்பூ கோலா உருண்டை செஞ்சுரலாம்மா என்று கேட்கிறார். அதுக்கும் வாழைப்பூ உரிக்க ரொம்ப லேட் ஆகும் சோயா கோலா உருண்டை செய்து விடலாம் என்று முடிவு எடுத்து சோயா வாங்க செல்கிறார். 


கோபி எனக்கு இது மாதிரி ஒரு பிரஷர் வந்தா நான் அரை மணி நேரம் இல்ல அரை நாள் கூட ஆயிடும் ஆனா பாக்கியா எவ்வளவு ஸ்மார்ட்டா யோசிச்சு முடிவு பண்ணிட்டா பாருங்க என்று பெருமையாக பேசுகிறார். கொஞ்ச நேரத்தில் வாழை இலை கட்டு வர பிரித்துப் பார்த்தால் எல்லா இலையும் கிழிந்து போய் இருக்கிறது. செல்வி என்ன இப்படி இருக்கு என்று கேட்கிறார் ஒன்னு ரெண்டு தான் பிரிஞ்சி இருக்கும் என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல எல்லாமே தான் கிழிஞ்சி இருக்கு என்று சொன்னவுடன் பாக்யா கிழிஞ்ச இலை எல்லாம் எங்க தலையில கட்ட பாக்குறீங்களா என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது கோபி 50 தலை வாழை இலையை எடுத்துக் கொண்டு வாங்க என்று போன் பண்ணி சொல்லி விடுகிறார். மறுபக்கம் கோபி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பாக்கியா வேலை எல்லாம் செய்ய வேண்டாம் நீங்க உட்காருங்க என்று சொல்லுகிறார்.


Advertisement

Advertisement