முன்னனி நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடித்து வெளியாகிய பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகினர்.கடந்த ஆண்டு தனது மாமனாகிய கார்த்திக் என்பவரை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
சோஷியல் மீடியாக்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா தனது கர்ப்பத்தின் போது எடுத்துக்கொண்ட நினைவுகளை அதிகம் பகிர்ந்து வருவார்.இந்நிலையில் தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக்கின் கையின் மேல் தனது கையை வைத்து குழந்தையின் முகத்தினை மறைத்து அருகில் குழந்தையின் கை இருப்பது போன்று ஒரு புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார்.இப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Listen News!