• Jul 21 2026

அனிருத் - காவ்யா திருமணத்தில் புதிய சஸ்பென்ஸ்.. பலரும் எதிர்பாராத சம்பவம் லீக்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத், தற்போது தனது இசைப் பயணத்தைப் போலவே தனிப்பட்ட வாழ்க்கையாலும் கவனத்தை ஈர்த்து வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் அனிருத்தின் திருமணம் குறித்த தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.


சமீப காலமாக, சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகத் தலைவருமான காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதுகுறித்து இரு தரப்பினரும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், நடிகரும் அனிருத்தின் உறவினருமான ஒய்.ஜி. மகேந்திரன் அளித்த பேட்டி இந்த தகவலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

நடிகை குட்டி பத்மினியின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஒய்.ஜி. மகேந்திரன், "அனிருத் மிகவும் நல்ல குணம் கொண்டவர். அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர்கள் இருவரும் அருமையான ஜோடி. அந்தப் பெண் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர். தனது தந்தையின் தொழில் திறமையைப் பெற்றுள்ளார். அனிருத்தும் அவரும் இணைந்து எதிர்காலத்தில் இசை சார்ந்த தொழில்களிலும் சாதிப்பார்கள்.." என்று தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், திருமணம் தொடர்பாக அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல் உறுதியாகும் வரை ரசிகர்கள் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement