இந்திய மாடலாக காணப்படும் ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் போட்டோ ஷூட் எடுத்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த புகைப்படங்கள் இன்றளவில் மட்டும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி திறமையான மற்றும் தைரியமான பெண் என்பதை நிரூபித்து இருந்தார். அதன்பின் தனது திறமைக்கேற்ற கேரக்டருக்காக காத்திருந்தார்.
மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற திரைப்படம் தோல்வியை தழுவியது. அதன்பின் தற்போது 'இடும்பன்காரி திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்பில் காணப்படுகின்றது. இந்தப் படத்தில் இதற்கு முன் நடித்த கேரக்டர்களை விட மிகவும் வலுவான ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவரை தேடி பல இயக்குனர்கள் படையெடுத்தாலும் தனது மனசுக்கு ஏற்ற கதைகளையும் கேரக்டர்களையும் மட்டுமே இவர் ஏற்று நடிப்பதில் உறுதியாக உள்ளார்.
இந்த நிலையில், தற்போது கடற்கரை ஒன்றில் சிகப்பு நிற சுடிதார் அணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார் ரம்யா பாண்டியன். அதில் தன்னுடைய தாவணியை பறக்கவிட்டு காத்து வாக்குல கலக்கல் போட்டோஸ் எடுத்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்,
Listen News!