நடிகர் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஏ.எல் விஜய். இவருடைய அப்பா பிரபல தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பன் ஆவார்.
இதைத் தொடர்ந்து பொய் சொல்ல போறோம், தெய்வத்திருமகள், மதராசபட்டினம், தாண்டவம் மற்றும் இந்த ஆண்டு வெளியான மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்களையும் இயக்கியிருந்தார்.
தெய்வத்திருமகள் படத்தை இயக்கும் போது நடிகை அமலா பாலுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனாலும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அமலாபாலை விவாகரத்து செய்து பிரிந்தார் ஏ.எல் விஜய்.
விஜய்யை பிரிந்த அமலாபாலும் கடந்த ஆண்டு தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல ஏ.எல் விஜயையும் ஐஸ்வர்யா என்பவரை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் தனது பிறந்தநாளை இரண்டாவது மனைவி மற்றும் தனது மகனுடன் சந்தோஷமாக கொண்டாடி வருகின்றார் ஏ. எல் விஜய்.
அதேபோல அமலாபால் வீட்டிலும் குழந்தையின் வரவை முன்னிட்டு கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன.
Listen News!